தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.எல். பாலாஜி சரவணன் அவர்கள் அறிவிப்பு !
தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆண்கள் 6 பெண்கள் என மொத்தம் 41 ஊர்காவல் படைப் பணிகளுக்கு நிரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் 18 வயதிற்கு குறையாமல் 45 வயதுக்கு மிகவும் இருப்பவர்கள் சேவை மனப்பான்மையுடன் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராகவும் எவ்வித குற்ற பின்னணியும் இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இத்தேர்வு வருகின்ற 21.12.2022 அன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலக கவாத்து மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது.
மேற்படி தேர்வில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கல்வி வயது நிரூபிக்க அசல் மற்றும் நகல் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார.
@tnpoliceoffl @SouthZoneTNpol @DRLBalajiSaravanan

