Showing posts with label Voter aadhaar link. Show all posts
Showing posts with label Voter aadhaar link. Show all posts

Friday, September 16, 2022

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 1.8.22 முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஆன்லைன் மூலமும் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 41.77 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். 

மேலும் நகரப்பகுதிகளில் இந்த பணி குறைவாகவே உள்ளதால், வாக்காளர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தால் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,611 வாக்குச்சாவடிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. 

சிறப்பு முகாமில் வாக்காளர்கள் நேரடியாக தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அலைபேசி எண் போன்ற விவரங்களை படிவம் 6 பி-ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பித்து இணைக்கலாம். வாக்காளர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு 2023

Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Recruitment 2023 | Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Job...