Friday, September 16, 2022

தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

 தூத்துக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

தூத்துக்குடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்தராஜ் (56), என்பவர் முத்தையாபுரத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா விசாரணை நடத்தி, போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜை கைது செய்தார்.

No comments:

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் மகளிர் கல்லூரி வேலைவாய்ப்பு 2023

Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Recruitment 2023 | Arulmigu Palaniandavar Arts College for Women Non Teaching Job...