இந்திய தபால் துறையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிப்பு மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 24 வட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி58,099 தபால்காரர் பணியிடங்களுக்கும், 1445 அஞ்சல் காவலர் பணியிடங்களுக்கும் ,37,539 MTS பணியிடங்களும் உள்ளன.
இந்தக் காலிப் பணியிடங்கள் மாநில வாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 23 மாநிலங்களின் காலிபணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6130 தபால்காரர்கள்,128 அஞ்சல் காவலர்கள்,3316 MTS பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். சில பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சமாக 32 வயதாக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது :
- Indian Post indiapost.gov.in அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்
- முன் பக்கத்தில் உள்ள ஆள்சேர்ப்பு இணைப்பை கிளிக் செய்யவும்
- நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவி தேர்ந்தெடுக்கவும்
- தகுதியான அளவுகோல்களை சரிபார்க்கவும் உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்
- அதன்பிறகு படிவத்தை பூர்த்தி செய்யவும்
- உங்கள் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு கட்டணத்தை செலுத்தி சமர்ப்பிக்கவும்
- ஒப்புகை படிவத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து Print Out எடுத்து கொள்ளவும்.

No comments:
Post a Comment